Monday, February 26, 2018

"வித்தியாவை" வீணாக்கி
"சேயாவை" சிதைத்து 
"நந்தினியை"நாசமாக்கி
ஒன்றுமறியா எங்கள் 
செல்ல மகள் "ஹாசினியை" தின்று 
இன்னும் எத்தனையோ பூக்களை கொன்றொழித்த அத்தனை காமுகர்களையும் என்ன செய்தோம் நாம் ??

பெண் மகவாய் இவள் பிறந்தது குற்றமா?? 
பெண் பிள்ளை வேண்டுமென 
இவளை பெற்றது குற்றமா?

சிறு மொட்டொன்று மலரும் முன்னே அதன் இதழ்களை கூட பிய்த்தெறிய மனம் வரா மனிதர்களுக்கு மத்தியில் ....
மொட்டென்ன? பூவென்ன? அத்தனையும் எம்மால் தான் அழிக்கப்பட வேண்டும் என கங்கணம் கட்டித்திரியும் காடையர்களே.........
எங்கிருந்தடா வந்தீர்கள் நீங்களெல்லாம் ??????

தாயின்றி , தங்கையின்றி , தாரமுமின்றி தான் தரணியில் வாழ்கின்றீரோ???

விழுந்த பல் கூட சரியாக முளைத்திராத அந்த சின்னஞ்சிறு மொட்டு 
அப்படி என்னதான் செய்து விட்டது உனக்கு???

கள்ளமில்லா சிரிப்பை கண்ணுக்குள்ளே வைத்திருந்தாயே ஹாசினி குட்டியே..
வெள்ளை உள்ளத்தால் வித்தைகள் பல புரிந்தாயே ......
அத்தனையும் உன் உடலுடன் சேர்ந்து 
கருகிப்போனதன் காரணம் தான் என்னவோ???

உன் நற்குணங்களில் ஒன்றாவது அழிக்கும் சக்தியாய் மாறியிருக்க கூடாதா??
அப்பிணம் தின்னும் கழுகு உன்னை சிதைக்கையிலே .......

உன்னை யாரென்றும் அறிந்திராத எமக்கு கூட ..
உன் இறப்பு எத்துணை துன்பத்தையம்மா தருகிறது????
ஓ...மன்னித்து விடு மகளே .... 
இது இறப்பல்ல "சிதைப்பு" .

நாமெல்லாம் உனக்காக கலங்கினாலும் .....
நான்கு வரிகளை எழுதினாலும் ...
அவையெல்லாம் அர்த்தமற்றவையே ..

இப்பொழுது நீ இறைவனடியில் இருப்பதால் 
உன்னிடம் நாம் ஒன்று இறைஞ்சுகின்றோம் ..
மறுபிறப்பென்ற ஒன்று உண்டென்றால் .....
மீண்டும் மண்ணுக்கு வா ..
மகளாய் வாழ்வதற்கல்ல......
உன்னை சிதைத்தவனையும் 
உன் சகோதரிகளை நாசம் செய்தவர்களையும் வதம் செய்து பெண் இனத்தை காக்கும் தெய்வமாய்...... 
ஹாசினி கடவுளாய் ...........
உன்னை காண ஆசை கொள்கிறோம் ....

(Google Image)

No comments:

Post a Comment